இந்தியாவில் புதிய ப்ளேபுக் 64ஜிபி வெர்ஷனை பிளாக்பெர்ரி நிறுவனம் வெளியிடும் என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம் தான். வாடிக்கையாளர்களை நவீன உலகிற்கு மாற்றும் வகையில் புதிய தொழில் நுட்பங்களை கொடு்த்து அசத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். முதலில் இந்நிறுவனத்தின் ப்ளேபுக் 64ஜிப் டேப்லடின் விலை ரூ.24,490 என்றும், விற்பனைக்கு வரும்போது இதன் விலை ரூ.37,990 என்றும் அறிவிக்கப்பட்டது.
அதே போல் இதில் 16ஜிபி வெர்ஷனின் விலை ரூ.13,490 விலையில் இருந்து 13,990 விலை வரையில் உயர்த்தப்பட்டது. விற்பனைக்கு வருகையில் இந்த 16ஜிபி வெர்ஷன் ப்ளேபுக் 37,990 விலையில் வெளியானது.
இந்த புதிய ப்ளேபுக் 64ஜிபி வெர்ஷன் ப்ளேபுக் 2.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். 1 வருடத்திற்குள் இந்த புதிய ப்ளேபுக் 64ஜிபி வெர்ஷன் 10 லட்சம் யூனிட்கள் விற்பனையாகும் என்று பிளாக்பெர்ரி நிறுவனத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.
அதி வேகத்தில் இயங்கும் இன்டர்நெட் வசதி உள்ளதால் இந்த டேப்லட், 3ஜி நெட்வொர்க் வசதியை அற்பதமாக வழங்கும். இந்திய மார்கெட்டில் இந்த ப்ளேபுக் டேப்லட் ரூ.19,990 விலையில் கிடைக்கும்.