இஸட்டிஇ அறிமுகப்படுத்திய புதிய டேப்லெட்!

Filed under: IT News |

இந்த வருடம் லாஸ் வேகசில் நடந்த நுகர்வோர் கண்காட்சியில் ஏராளமான டேப்லெட்டுகள் மற்றும் கெட்ஜெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் போட்டி அதிகமாக இருந்தது. மேலும் புதிய நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர். அவ்வாறு புதிதாக அதே நேரத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன் வந்த டேப்லெட்டின் பெயர் இஸட்டிஇ டி98 ஆகும்.

இந்த இஸட்டிஇ டி98 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கும் போது இந்த டேப்லெட் 7 இன்ச் அளிவில் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதுபோல் என்விடியா டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இதில் கேமரா மற்றஉம் ஜிபிஎஸ் வசதிகளும் உண்டு.

இஸட்டிஇ டி98 டேப்லெட் மிகவும் ஸ்டைலாக இருக்கிறது. இது டேக்ரா 3 ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இதன் செயல் திறன் பக்காவாக இருக்கும் என்பது நிச்சயம். இந்த டேப்லெட்டின் வெளிப்பக்கம் ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளதால் இதை இதை கையில் வைத்துக் கொள்வதற்கு மிக எளிதாக இருக்கும்.

இந்த டேப்லெட் தரம் வாய்ந்த ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இதன் வேகம் அதிகமாக இருக்கும். இந்த டேப்லெட்டின் மாதிரி மிக வேகமாக இயங்கியது. அதுபோல் இதில் உள்ள அப்ளிகேசன்களும் மிக அருமையாக வேலை செய்தன. இந்த இஸட்டிஇ டி98 டேப்லெட்டின் விலை மற்றும் அதன் விற்பனைத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் தெரியும் என்று நம்பலாம்.

Posted by on January 19, 2012. Filed under IT News. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>